Planting palm seeds across Namakkal district on behalf of the People’s Organization
மக்கள்பாதை அமைப்பு சார்பில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் பனை விதை நடவு செய்யப்பட்டது.
மக்கள் பாதை அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பனைவிதை ஒரே நாளில் விதைக்கும் நிகழ்வுக்கு திட்டமிட்டு அதை நவ.4ல் நடவு செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
அந்த வகையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 5,000 பனைவிதை ஒரே நாளில் நடவு செய்யப்பட்டது.
அதேபோல் நாமக்கல்லில் பல்வேறு இடங்களில் பனை விதை நடவு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு அதன் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் தலைமை வகித்து, ரயில்வே ஸ்டேஷன் அடுகே செல்லும் கொசவம்பட்டி ஏரிக்கரையிலும், நல்லிபாளையம் சாவடி ஏரிக்கரையிலும் 1,500க்கும் மேற்பட்ட பனைவிதை நடவு செய்யப்பட்டது.
இந்த களப்பணியில் நம்பிக்கையில்லம் இயக்குனர் கதிர்செல்வன், சதர்ன் டிரான்போர்ட் உரிமையாளர் தயாளன், பொறுப்பாளர் பத்மநாபன் உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மக்கள்பாதை அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.