Plastic Bags campaign for movement of merchandise in Perambalur
பெரம்பலூர் மாவட்ட அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பான வணிகர் நலச் சங்கத்தின் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கவும், குப்பைகளில் பாலித்தீன் பைகளை தவறுவதலாக உட்கொண்டு வளர்ப்பு பிராணிகள் உயிரிழப்பதை தவிர்க்கவும், பெரம்பலூர் நகரில் அனைத்து வியாபாரிகள், பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்த்து துணிப்பைகள் பயன்படுத்துவதை பயன்பாட்டை அதிகரிக்கவும் விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் இன்று மாலை நடத்தப்பட்டது.
பெரம்பலூர் பள்ளிவாசல் தெருவில் தொடங்கிய இந்த பிரச்சார இயக்கத்தை அதன் தலைவர் சத்யா நடராஜன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் நல்லதம்பி, மாவட்ட அவைத் தலைவர் தனபால், துணைத் தலைவர் முகமது ரபீக், பொருளாளர் வினாயகா ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பழைய பேருந்துநிலையம், சூப்பர் பஜார் தெரு, தபால் நிலையத் தெரு, பள்ளிவாசல் தெரு, கடைவீதி போன்ற பகுதிகளில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
அப்போது ஓட்டல்களுக்கு உணவு பொருட்கள் வாங்க செல்லும்போதும், இறைச்சி கடைகளுக்கு செல்லும் போதும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்த்து துணிப்பைகள், பாத்திரங்களை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.