PM kisan scheme to link Aadhaar to get 13th installment: Perambalur Collector Info
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பி.எம்.கிசான் திட்டப் பயனாளிகள் 13-வது தவணை தொகையை தொடர்ந்து பெற தங்களது ஆதார் விவரங்களை பி.எம்.கிசான் வலைதளத்தில் டிசம்பர்-31ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தெரிவித்துள்ளதாவது:
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு தவணைகளில் ரூபாய் 2000 வீதம் மொத்தமாக ரூபாய் 6000 வழங்கப்பட்டு வருகிறது. இது வரை 12 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 13-வது தவணை பி.எம்.கிசான் திட்டப்பலனை பெற விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பி.எம்.கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இது நாள் வரை பெரம்பலூர் மாவட்டத்தில் தோரயமாக 12,000 பயனாளிகள் தங்கள் ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர். பதிவேற்றம் செய்ய தவறிய விவசாயிகளுக்கு 13-வது தவணை மற்றும் அதனை தொடர்ந்து வரும் தவணைகள் வழங்கப்படமாட்டாது. எனவே, விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய அருகில் உள்ள பொது சேவை மையங்கள் அல்லது தபால் நிலையங்களை அணுகி உடனடியாக பதிவேற்றம் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏற்கனவே ஆதார் தகவல்களை பதிவேற்றம் செய்த பயனாளிகள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டாம். பதிவேற்றம் செய்ய டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாளாகும், என தெரிவித்துள்ளார்.
விளம்பரம்: