PMK seeking to solve drinking water problem, protest demonstration
குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனை போக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அனைத்து கிராமபகுதிகளுக்கும் குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்திசிலை அருகே பா.ம.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பொறியாளர் கண்ணபிரான் உள்பட பலர் கண்டன உரையாற்றினார். இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். வழக்கறிஞர் சத்தியசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.