Police in Perambalur be held in China for the Asian Masters Tournament Selected

சீனாவில் நடைபெறும் ஏசியன் மாஸ்டர்ஸ் போட்டிக்கு பெரம்பலூர் போலீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எஸ்.பி., பதக்கம் வழங்கி பாராட்டினார்.

பெரம்பலூர் மாவட்ட, ஆயுதப் படையில் பணிபுரிந்து வரும் வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூர் கிராமத்தை சேர்ந்த முதல் நிலை காவலர் கி.இளங்கோவன் கடந்த 07.01.17 முதல் 08.01.17 வரை சென்னையில் நடைபெற்ற 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாஸ்டர்ஸ் தடகள விளையாட்டு போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் தமிழக காவல் துறை சார்பாக கலந்து கொண்டு தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த 21.02.17 முதல் 25.02.17 வரை தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள கோச்பவுலி மைதானத்தில் நடைடிபற்ற தேசிய அளவிலான 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாஸ்டர்ஸ் தடகள விளையாட்டு போட்டியில் 4 X 400 தொடர் ஓட்டப் பிரிவில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.

இதன் மூலம் வருகின்ற ஏப்ரல் மாதம் சீனாவில் நடைபெற உள்ள ஏசியன் மாஸ்டர்ஸ் தடகளபோட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் கலந்து கொண்டு தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்த்தமைக்காக பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்திரா. முதல் நிலை காவலர் கி.இளங்கோவனுக்கு பதக்கம் அளித்து பாராட்டி கவுரவித்தார். ஏ.டி. எஸ்.பி ஞான.சிவக்குமார், டி.எஸ்.பி. கார்த்திகேயன் உள்ளபிட்ட காவல் துறையினர் உடன் இருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!