Police in Perambalur motorists two wheelers to raise awareness of the rally helmet

பெரம்பலூர் மாவட்ட போலீசார், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹெல்மெட் பேரணி நடத்தினர்.

இரு சக்கர வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நகரங்களில் போலீசாரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பெரம்பலூர் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார் உள்ளிட்ட ஆகியோர் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார், ஹெல்மெட் அணிந்தபடி பேரணி நடத்தினர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் துவங்கிய பேரணி பாலக்கரை, வெங்கடேசபுரம், மதனகோபாலபுரம், சங்குப்பேட்டை, காமராஜர் வளைவு, பெரியார் சிலை வழியாக சென்று பழைய பேருந்து நிலையம். சென்றடைந்து, மீண்டும் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தனர். இது தவிர, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

அதில், ‘உயிர்பாதுகாப்புக்கு கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். குடிபோதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது. லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டக் கூடாது’ என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் இருந்தது.

மேலும், இரு சக்கர வாகனங்களில், ‘கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்’ என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களை போலீசார் ஒட்டினர். முன்னதாக பெரம்பலூர் டி.எஸ்.பி கார்த்திக் தொடங்கி வைத்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!