Polio vaccination camp for children in Perambalur district, day after tomorrow

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை பிப்.27 ஞாயிற்றுக்கிழமை தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளுக்காக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது.

அருகாமையிலுள்ள மாவட்டங்களின் குடிசைபகுதிகள், நரிக்குறவர்கள் பகுதிகள், பணி நிமித்தமாக இடம்பெயர் மக்கள் வாழும் பகுதிகள் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ள 387 மையங்களில், 5 வயதிற்குட்பட்ட 46000 குழந்தைகளுக்கு போலியோசொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் பொது சுகாதாரத் துறை பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என முகாம் ஒன்றுக்கு 4 நபர்கள் வீதம் பல்வேறு துறைகளை சார்ந்த 1548 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் பேருந்து நிலையங்கள், கோவில்கள், மற்றும் மக்கள் கூடுமிடங்களில் உள்ள குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும். ஏதேனும் காரணங்களுக்காக முகாம் நாளன்று விடுபடும் குழந்தைகளுக்கு அடுத்து வரும் இரண்டு நாட்களில் இப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று பார்வையிடப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்த விதமான பின்விளைவுகளும் ஏற்படாது. எனவே, பெற்றோர்கள் தங்களின் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கனவே எத்தனைமுறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் போலியோ சொட்டு மருந்து முகாம் நாள் 27.02.2022 அன்று காலை 7 முதல் மாலை 5 மணி வரை முகாம்களுக்கு அழைத்து சென்று போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ பாதிப்பு இல்லாத மாவட்டமாக திகழ்ந்திட ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!