Political Training Course for Perambalur-Ariyalur Communist Party
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் பெரம்பலூர் அரியலூர் மாவட்டக் குழு இடைக்கமிட்டி உறுப்பினர்களுக்கான அரசியல் பயிற்சி முகாம் துறைமங்கலத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் 1.4.2018 அன்று நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை பயிற்சி பட்டறை முகாமில் கலந்து கொண்டு 2018 பிப்ரவரி 17 முதல் 20 வரை தூத்துக்குடியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் 22 வது மாநாட்டு முடிவுகளாகிய கட்சியின் சொந்த பலத்தை அதிகரிக்க வேண்டும், இடது ஜனநாயக அணியை பலம் வாய்ந்த சக்தியாக உருவாக்கிட அன்றாட பணியில் ஒன்றாக இணைப்பது, வாக்க வெகுஜன அமைப்புகளை விரிவாக்கி வலுப்படுத்த மாநாடு முடிவு செய்துள்ளதை கட்சியின் இடைக்குழுக்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்க உரையாற்றினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்அழகர்சாமி, என்.செல்லதுரை, எ.கலையரசி, எஸ்.அகஸ்டின், பி.ரமேஷ் வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம், மற்றும் அரியலூரை சேர்ந்த நிர்வாகிகள் சிற்றம்பலம், துரைசாமி, வெங்கடாசலம், கந்தசாமி, புனிதன், பரமசிவம் உள்பட பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம், செந்துறை, ஆண்டிமடம், அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், தா.பழூர் உள்ளிட்ட 10 இடைக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.