Pongal gift package for construction workers welfare board members; Perambalur Collector Venkatapriya started giving.

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 15,700 கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.70.65 லட்சம் மதிப்பீட்டிலான பொங்கல் பரிசு தொகுப்பினை கலெக்டர் வெங்கட பிரியா வழங்கி தொடங்கி வைத்த அப்போது அவர் பேசியதாவது:

நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2021ஆம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்புகள் 12,69,550 கட்டுமான தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ரூ.95 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்க தமிழக அரசு ஆணை வழங்கப்பட்டதை தொடர்நது தமிழக முதலமைச்சரால் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 4,944 தொழிலாளர்களுக்கும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2,828 தொழிலாளர்களுக்கும், வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 3,697 தொழிலாளர்களுக்கும், வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் 4,231 தொழிலாளர்களுக்கும் என மொத்தம் 15,700 தொழிலாளர்களுக்கு ரூ. 70 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில், பச்சை அரிசி 2 கிலோ, பருப்பு 1 கிலோ, சமையல் எண்ணெய் 500 கிராம், நெய் 100 கிராம், வெல்லம் 1 கிலோ, ஏலக்காய் 5 கிராம், முந்திரிப் பருப்பு 25 கிராம் மற்றும் உலர் திராட்சை 25 கிராம் என மொத்தம் 8 பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஒவ்வொரு கட்டுமான தொழிலாளர்கள் வழங்கப்பட்டது இதனை பயன்படுத்தி நல்ல முறையில் பொங்கல் திருநாளை கொண்டாடிட வேண்டும், அரசின் நல திட்ட உதவிகளை தெரிந்துகொண்டு அதனை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என கலெக்டர் வெங்கட பிரியா தெரிவித்தார்.

இந்நிகழ்வில் டி.ஆர்.ஓ ராஜேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சக்திவேல், கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆனால், பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றவர்கள் பெரும்பாலோனோர் கட்டுமானத் தொழிலில் ஈடுபடுவோர்கள் போல் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!