Pongal Prize for distribution to family card holders in Perambalur district
பெரம்பலூர் மாவட்டத்தில் 282 நியாயவிலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 1,64,893 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதன் துவக்க விழா இன்று பெரம்பலூர் துறைமங்கலம் நியாய விலைக்கடையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.ராமசந்திரன் (குன்னம்), இரா.தமிழச்செல்வன்(பெரம்பலூர்), நாடாளுமன்ற உறுப்பினர்கள் மா.சந்திரகாசி (சிதம்பரம்), பி.மருதராஜா (பெரம்பலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுமார் 30 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி துவங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பெரியசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் பத்மாவதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர் பிரேமா, பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் ஜமால் முகமது, பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் இராஜேஸ்வரி, பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் இராஜாராம், பொதுவிநியோக திட்டத்தின் துணைப்பதிவாளர் (பொறுப்பு) பாண்டித்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.