12ஆம் வகுப்பு தேர்வில் பெரம்பலூர் மாவட்ட அளவில் ஸ்ரீராமக்கிருஷ்ணா பள்ளி மாணவர்கள் முதல் மூன்று இடங்களை வென்றனர்.
நடந்த 12ம் வகுப்பு தேர்வில் பெரம்பலூர் மாவட்ட அளவில் 67 பள்ளிகளில் இருந்து 8ஆயிரத்து 747 பேர்கள் தேர்வு எழுதினர். இதில் 8641 பேர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 96.73 சதவீதமாகும்.
இதில் முதல் மூன்று இடங்களை பெரம்பலூர் ஸ்ரீராமக்கிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் மூன்று இடங்களை வென்றனர்.
அவர்கள் முறையே : ஆர்.ராகுல் 1200க்கு 1183 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், கே. அகல்யா 1200க்கு 1181 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மனசாதேவி, பி. கனிஷ்கர் ஆகிய கே. அகல்யா 1200க்கு 1180 மதிப்பெண்கள் பெற்று இருவரும் மூன்றாம் இடத்தையும் பெற்று உள்ளனர்.
வேதியியல் பாடத்தில் 23 பேரும் உயிரியல் பாடத்தில் 14 பேரும், கணக்கு பாடத்தில் 74 பேரும், வராலாறு பாடத்தில் 2 பேரும், கணக்குபதிவியல் பாடத்தில் ஒருவரும், தட்டச்சு பாடத்தில் ஒருவரும் என 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஹோம் சயின்ஸ் பாடத்தில் தேர்வு எழுதிய 44 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.