பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் காரை கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 35). இவரது மனைவி நிஷாந்தி(30) மற்றும் குழந்தைகள் ஹாசினி(7), கோபி(4), ஆகிய நான்கு பேர்களும் பெங்களூர் செல்வதற்காக இன்று காலை 9 மணி அளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தனர்.
அங்கு காலை உணவை அங்கிருந்த ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது சிறுவன் கோபி வேடிக்கை பார்த்துக் கொண்டே ஹோட்டலில் இருந்து வெளியே வந்து பேருந்து நிலையத்தினுள் வழி தவறினான்.
குழந்தையை காணவில்லை திடுக்கிட்ட பெற்றோர்கள் உடனடியாக பேருந்து நிலையம் முழுவதும் தேடி அலைந்தனர். குழந்தை கிடைக்கவில்லை.
இது அப்போது அங்கு பணியில் இருந்த ஊர்க்காவல் படையினர் ராணி, வேம்பு, ஆகிய நான்கு பேரும், மீண்டும் பேருந்து நிலையம் மற்றும் வெளிப்பகுதிகளில் பெற்றோருடன் தேடி கொண்டிருந்தனர்.
மேலும், பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழகத்தினர் குழந்தை வழி தவறி ஏதாவது பேருந்தில் ஏறி சென்று விட்டானா என்ற கோணத்தில் ஆத்தூர், அரியலூர், துறையூர் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் சென்ற பேருந்துகளில் குழந்தை தனியாக பயணிக்கிறாத என நடத்துனர்களிடமும் செல்போன் வழியாக கேட்டு அறிந்தனர்.
இந்நிலையில், தனியாக சிறுவன் தவித்து கொண்டிருப்பதாக ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நல்லண்த்துடன் அப்பகுதி பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படையினர் செல்வி, ரேவதி ஆகியோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து தனியான அழுது கொண்டிருந்த சிறுவனை மீட்டு ஆறுதல் கூறி பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தேடியும் கிடைக்காத குழந்தையைக் கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளிக்க பெற்றோர்கள் பெரம்பலூர் காவல் நிலையம் சென்ற போது, அங்கு சிறுவன் இருப்பதை கண்ட பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பெரம்பலூர் போலீசார் பெற்றோர்களிடம் குழந்தை ஒப்படைத்தனர்.
இந்த குழந்தை காணத போன சம்பவம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.