Private bus – Auto auto collision! Husband and wife are injured !! near in Perambalur
பெரம்பலூர் அருகே தனியார் பேருந்து லோடு ஆட்டோ மீது மோதியதில் மாதுளம் பழம் விற்பனை செய்து வந்த கணவன் – மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெரம்பலூரில் இருந்து அரியலூரை நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து, பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி- எறையூர் பிரிவு பகுதியில், பேரளியில் அமைய உள்ள சுங்கச்சாவடி அருகே மாதுளம் பழம் விற்று விட்டு பெரம்பலூரை நோக்கி வந்து கொண்டிருந்த லோடு ஆட்டோ மீது எதிர்பாரதவிதமாக மோதியது.
ஆட்டோவில் வந்த, திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணணூரைச் சேர்ந்த குமார் (வயது 40), மற்றும் அவரது மனைவி சுசிலா( வயது 35) ஆகிய இருவரும் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த செய்த மருவத்தூர் போலீசார் விபத்துக்குக்கு காரணமான தனியார் பேருந்து ஓட்டுநர் சுகுமாரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.