Private Sector Employment Camp at Veppanthattai: Perambalur Collector Information!

தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேப்பந்தட்டை இணைந்து நடத்தும் வட்டார அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 02.03.2023 (வியாழக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வேப்பந்தட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் வேப்பந்தட்டை வட்டாரத்தைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, 12-ஆம் வகுப்பு, கலை அறிவியல், ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்துள்ள 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குள் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் (இருபாலர்) கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே, விருப்பமுள்ளவர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு 04328-225362 மற்றும் 9444094325 ஆகிய தொலைபேசி மற்றும் அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!