PrivateCandidates public exams for 10th Feb 22, 23 on practical
பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி விடுத்துள்ள தகவல்:
மார்ச் – 2017ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள தனித்தேர்வர்கள் எதிர்வரும் 22.02.2017 மற்றும் 23.02.2017 ஆகிய இரு நாட்களில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண் தனித்தேர்வர்களும் மற்றும் பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண் தனித்தேர்வர்களும் செய்முறைத் தேர்வினை எழுத வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. எனவே சம்மமந்தப்பட்ட தனித் தேர்வர்கள் மேற்காண் தேர்வு மையங்களில் நடைபெறும் செய்முறைத் தேர்வில் தவறாது கலந்து கொள்ள வேண்டும். என தெரிவித்துள்ளார்.