Products at Perambalur using GST are sold at a higher price: no listeners
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜி.எஸ்.டி வரியை காரணம் கூறி குறிப்பிட்ட சில கடைகளில் கொள்ளை லாபத்திற்கு விற்று வருகின்றனர். அதிகாரிகள் கையூட்டும், அரசியல்வாதிகள் நன்கொடையும் பெறுவதால் கண்டும் காணமல் இருந்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் நகர் மற்றும் புறநகர்கள் உள்ள வணிக நிறுவனங்களில் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள வரியான ஜி.எஸ்.டி-யை வசூலிப்பதாக கூறுகின்றனர். ஆனால், பொருட்களுக்கு விதிக்கப்பட்ட பழைய வரியை கழிக்காமலேயே பொருட்களின் விலையுடன் புதிய ஜி.எஸ்.டி வரியை சேர்த்து வசூல் செய்கின்றனர்.
உதாரணமாக 250 கிராம் எடை கொண்ட பொருளின் விலை ரூ. 65 என வைத்துக் கொண்டால், அதனை பழைய வரியில் இருந்து கழித்தே புதிய ஜி.எஸ்.டி வரியை சேர்க்க வேண்டும். ஆனால் ரூ. 65க்கு சுமார் 12 சதவீதம் ரூ. 7.80 சேர்த்து ரூ.72.80 என்பதை ரூ. 73 ஆக வசூல் செய்கின்றனர். இது போன்று வசூல் செய்யும் வியாபாரிகள் அரசுக்கு வரியை செலுத்துகிறார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இதை வாடிக்கையாளர்கள் கண்டுபிடிப்பதும் பொதுமக்களுக்கு சிரமம்.
பெரும்பாலான வணிக நிறுவனங்கள், தேனீர் கடைகள், உணவு விடுதிகளில் பழைய கட்டண முறையையே வசூலித்து வருகின்றனர். சிற்சில வணிக நிறுவனங்கள் இது போன்று வசூலிப்பதால் பொருட்களின் விலை பல மடங்கு உயர்கிறது. விற்பனை செய்பவர்களுக்கு நல்ல லாபமும், வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு இழப்பும் ஏற்பட்டு வருகிறது.
அதிகமாக வசூலில் செய்பவர்களை அனைத்து கட்சியினருக்கும், அதிகாரிக்கும் நன்னு தெரியும். ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்க முன்வராத காரணம் அரசியல்வாதிகள் தங்களது கட்சிகளுக்கு நன்கொடைகளாகவும், அதிகாரிகள் கையூட்டாகும் பெற்றுக் கொள்வதால் இதனை தடுத்து நிறுத்த அக்கறை காட்டி கொள்வதில்லை.