Property values increase 2 times without any business; Jewelers and gold investors are happy!
தங்கம் விலை நாளுக்கு விண்ணை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இதனால், சமானிய மக்களின் கனவுப் பொருளாகி வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும், பெண் பிள்ளைகள் வைத்திருப்பவர்கள் என்னடா இந்த விலைக்கு போயிட்டு இருக்கு…அமெரிக்க அதிபர் டிரமப் வந்ததுடன் விலை குறையும் என்று பார்த்தால், முன்பை விட அதிக விலை ஏற்றத்தை கண்டு மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இது ஒரு புறம் இருந்தாலும், தங்கத்தின் விலையேற்றம் அடகு வைப்பவர்களுக்கும், தங்க முதலீடு செய்பவர்களுக்கும், கடையில் தங்கத்தை வைத்திருப்பவர்களுக்கும்,கொடுக்கிற தெய்வம் கூரையை பிரித்து கொடுக்கும் என்பது போல தங்கத்தின் தொடர்ந்து 2 மடங்கான விலை ஏற்றத்தால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால், தங்க வணிகம் செய்யும் வணிக நிறுவனங்களின் சொத்து மதிப்பு இரு மடங்காக வியாபாரம் செய்யமலேயே உயர்ந்துள்ளது. இதனால், அதிகளவில் தங்கம் வாங்கிய வணிகர்கள் பெரும் ஆனந்தத்தில் உள்ளனர்.