Protest demonstration in Namakkal condemning the restrictions imposed on the Iyyappa devotees in Sabarimala

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சபரிமமைலையில் ஐயப்ப பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கண்டித்தும், ஐயப்ப பக்தர்களுக்கு எதிராக செயல்படும் கேரள மாநில அரசைக் கண்டித்தும் நாமக்கல் மாவட்ட சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாமக்கல் பார்க் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு கோட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் சுப்ரமணியம் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். பாஜக மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் இளமுருகன், ஆர்எஸ்எஸ் அமைப்பாளர் ஹரிஹரகோபால், பாஜக கோட்ட பொறுப்பாளர் முருகேசன், சம்பத்குமார், பிரனவ்குமார், முத்துக்குமார் உள்ளிட்ட திரளான ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497