Provide 1,35,129 certificates in the last year in the Perambalur District Government e-Service Centers

பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி விடுத்துள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் மற்றும் குன்னம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகத்திலும் அரசின் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றது.

இதில் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள் வருவாய்த்துறை கட்டுப்பாட்டிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் உள்ள மையங்கள் எல்காட் நிறுவன கட்டுப்பாட்டிலும் இயங்கி வருகின்றது.

இச்சேவை மையங்கள் மூலமாக வருவாய்த்துறையின் சான்றிதழ்கள், சமூக நலத்துறையின் திருமண நிதி உதவி திட்டம், இணைய வழி பட்டா மாறுதல், முதல் தலைமுறை பட்டதாரிக்கான சான்றிதழ்கள், கலப்புத் திருமண சான்றிதழ்கள், சொத்து மதிப்பு சான்றிதழ்கள், இரண்டு பெண் குழந்தைகளுக்கான சான்றிதழ்கள், ஆதார; அட்டை வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஓராண்டில் மட்டும் 40,439 வருமானச்சான்றுகளும், 17,570 சாதிச்சான்றுகளும், 22,451 இருப்பிடச்சான்றுகளும், 2,364 சிறு,குறு விவசாயிகளுக்கானச் சான்றுகளும், 23,997 பட்டா மாற்றங்களுக்கான சான்றுகளும், 14,109 மின்னனு குடும்ப அட்டைகளும் என பல்வேறு சேவைகள் மூலம் மொத்தம் 1,35,129 சான்றுகள் மற்றும் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாவட்ட ஆட்சியர; அலுவலகத்தில் உள்ள மையத்தில் மட்டும் தற்சமயம் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இடர;பாட்டை விரைவில் சரிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (நுடுஊழுவு) நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

மீதமுள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!