Providing certificates for pre-school education for children studying in Anganwadi centers

பெரம்பலூர் : ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், பெரம்பலூர; மாவட்டத்தில் 490 அங்கன்வாடி மையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அங்கன்வாடி மையங்களில் பயின்று வரும் குழந்தைகளுக்கு, தேவையான ஊட்டச்சத்து, ஆரம்பக்கால கல்வி கற்பதற்கான ஏற்ற சூழல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வதற்கு தேவையான பணிகளை செயல்படுத்தி வருகிறது.

மேலும் அங்கன்வாடி மையங்களில் பயின்று வரும் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி பாடத்திட்டத்தில் “ஆடிப்பாடி விளையாடு பாப்பா” என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள், துடிப்பு மிக்க முன்பருவக் கல்வி மற்றும் வளர்ச்சி மையங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிதியாண்டு முதல் அங்கன்வாடி மையங்களில் பயின்று ஆரம்பகால கல்விக்காக வேறு பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் முன்பருவக் கல்வி நிறைவு சான்றிதழ்களை வழங்கி இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.

அதன்படி 2016-17ஆம் கல்வியாண்டில் 5 வயது நிறைவடைந்து தொடக்கக் கல்வி பயிலச் செல்லும் பெரம்பலூர; மாவட்டத்திலுள்ள 3,511 அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி நிறைவு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. அதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, அவர்கள் 5 குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி நிறைவு சான்றிதழ்களை வழங்கினார்.

இச்சான்றிதழ்கள் வழங்குவதன் மூலம், அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கை அதிகரித்திடவும், இடைநிற்றலை குறைக்கவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் அங்கன்வாடியில் முன்பருவக்கல்வி பயின்று தொடக்கப்பள்ளிக்கு செல்லும் அனைத்து குழந்தைகளுக்கும் முன்பருவக்கல்வி நிறைவு சான்றிதழ்கள் அந்தந்த அங்கன்வாடி மையங்களிலேயே வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி, பெரம்பலூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிரேமஜெயம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!