The collector of the black flag officers besieged by demonstrating farmers In Perambalur boycott the plenary meeting of the cancellation of the sugar mill
பெரம்பலூர் சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் பேரவை கூட்டத்தில் கலெக்டர் உள்பட சர்க்கரை துறை ஆணையர், ஆலை அதிகாரிகளை கண்டித்து முற்றுகையிட்டு கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்து புறக்கணிப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் அருகே உள்ள எறையூரில் அரசுக்கு சொந்தமான பொதுத் துறை சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. அதன் 39வது ஆண்டு பங்குதாரர்கள் பேரவைக் கூட்டம் இன்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் நந்தக்குமார் தலைமையில் பெரம்பலூர் துரைமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டம் துவங்கிய உடன் தமிழ்த் தாய் வாழத்து பாடி முடிந்த பின்னர், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு , சர்க்கரை ஆலை நிர்வாகிகள் ஆலையை புணர அமைப்பது, மேம்பாடு செய்வது, கரும்புக்குரிய நிலுவைத் தொகை வழங்குதில் ஆண்டுக் கணக்கில் காலதாமதம் செய்வது, முறையான தரமற்ற உதிரி பாகங்களை பயன்படுத்துவதால் அடிக்கடி பழுதாகும் ஆலையை சீரமைத்து இயக்காமல், முடக்கி போட்டுள்ளதை கண்டித்து மேடையில் அமர்ந்து இருந்த கலெக்டர் நந்தக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளை முற்றுகையிட்டு கருப்பு கொடி காட்டி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆர்ப்பாட்டம் செய்த அவர்கள் கூட்டத்தை புறக்கணிப்பு செய்து பின்னர் மண்டபத்தை வெளியேறினர். அதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கூட்டம் நடத்தாமல் கலெக்டர் நந்தக்குமார் உள்பட அதிகாரிகள் வெளியேறினர். இதனால் இன்று நடக்க இருந்த பேரவைக் கூட்டம் ரத்தானது.

தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஆர்.இராஜாசிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கம், மற்றும் கரும்பு விவசாயிகள், கரும்பு டிராக்டர்கள் சங்கத்தினர் என ஏராளமானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!