Public demand to link only with a panchayat of the Asoor Union Councilor
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அசூர் கிராமத்தை சேர்ந்த நடேசன் மகன் செல்லப்பிள்ளை மற்றும் கிராம மக்கள் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கொடுத்துள்ள மனு :
வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள அசூர் கிராமத்தில் 2500 மேற்பட்ட வாக்களர்கள் உள்ளனர். ஒன்றிய கவுன்சிலருக்கு அந்தூர், அசூர், வரகூர் என 3 கிராமங்களும் இணைந்து கவுன்சிலர் பதவிக்கான இடமாக இணைக்கப்பட்டடுள்ளது.
எங்கள் கிராமத்தை இரண்டாக பிரித்து வெவ்வேறு ஊர்களில் இணைத்துள்ளனர். இது முற்றிலும் முரணாக இருப்பதுடன் எங்கள் ஊரை ஏதாவது ஒரு கிராமத்துடன் முழுமையாக இணைக்க வேண்டும். அப்போதுதான் ஒன்றிய கவுன்சிலர் முழுமையாக பணியாற்ற முடியும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.