Public demand to set up additional rain gauge in Perambalur district!

பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி, நெல், எள், கரும்பு, நிலக்கடலை, காய்கறிகள், தானியங்கள், கிழங்கு வகைகள், பூக்கள், மஞ்சள் போன்ற பயிர்கள் அதிகளவில் ஆண்டுதோறும் உழவர்களால் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது பெரம்பலூர், வேப்பந்தட்டை, தழுதாழை, கிருஷ்ணாபுரம், வ.களத்தூர், சர்க்கரை ஆலை எறையூர், அகரம்சீகூர், லப்பைக்குடிக்காடு, புதுவேட்டக்குடி, செட்டிக்குளம், பாடாலூர் ஆகிய பகுதிகளில் மழைமானி வைக்கப்பட்டு பதிவாகும் மழை அளவு கணக்ககிடப்பட்டு வருகிறது. இதனால், அந்தந்த பகுதியில் பொழியும் மழையை கொண்டு, நீர் வளத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ப பயிர் சாகுபடி செய்ய உதவும். ஆனால், சில நேரங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தாலும், கணக்கில் வராமல் பூஜ்ஜிமாக காட்டுகிறது. எனவே இந்த குறையை களைய பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய கிராமப்பகுதிகளலான எசனை, கை.களத்தூர், பூலாம்பாடி, அம்மாபாளையம், து.களத்தூர், கொளக்காநத்தம், குன்னம் ஆகிய பகுதிகளில் கூடுலாக மழைமானிகளை வைக்க போர்க்கால அடிப்படையில், விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மழைமானி அமைக்க சுமார் ரூ.15 ஆயிரம் மட்டும் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!