Public demand to the Minister of Transport to raise the age from 13 to 17 to charge half fare on buses!
தனியாருக்கு நிகராக தமிழகத்தில் போக்குவரத்து துறை பேருந்துகளை இயங்கி வருகிறது. கி.மீ ஒன்றுக்கு ரூ.60 நட்டமானலும், மக்களின் சேவையை கருத்தில் கொண்டு, கிராமங்கள், நகர்புறங்கள், மாநகரங்களையும் மற்ற மாநிலங்களை போல் கட்டணத்தை உயர்த்தாமல் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை பேருந்துகளை இயக்கி வருகிறது.
தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் தரைவழிப் போக்குவரத்தையே அதிக அளவில் நம்பி உள்ளனர். வசதி படைத்தவர்கள் சீருந்தில் சென்றாலும், பெண்கள், ஏழைகள், வயதானவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பொதுபோக்குவரத்தான பேருந்துகளையே பயன்படுத்துகின்றனர். தற்போது 13 வயதிற்கு உட்பட்பட்டவர்களுக்கு அரைக் கட்டணம் பேருந்துகளில் வசூலிக்கபட்டு வருகிறது.
அரசும், சட்டமும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை சிறுவர்களாக கருதுகிறது. பள்ளி கல்லூரி செல்லும் போது மாணவர்கள் இலவசமாக சென்றாலும், புறநகர் பேருந்துகளில் அரைக்கட்டணம் வசூலித்தால், 18 வயதிற்கு கீழ் உள்ள பெரும்பாலான மாணவர்கள் புறநகர் பேருந்துகளில் கட்டணம் செலுத்தி சென்று பயனடைவார்கள். இதனால், காலமும் விரயமும் குறைவாகும், நகர பேருந்துகளில் கூட்டமும் குறையும். எனவே, போக்குவரத்து துறை அமைச்சாராக இருக்கும் எஸ்.எஸ். சிவசங்கர் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் 18 வயதிற்கு கீழ் உட்பட்டவர்களுக்கு அரைக்கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.