Public grievance meeting at Perambalur Collector’s Office; 231 people petitioned!

கொரோனா தொற்று நோய் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில், கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் நேற்று நடந்தது. நடைபெற்றது. மனுக்கள் அளிக்க வந்த கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினர்.

பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், காவல்துறை தொடர்பான மனுக்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 231 மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடம் மனுக்களை நேரிடையாக பெற்றுக்கொண்ட கலெக்டர் வெங்கடபிரியா சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ. நா.அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் ம.பாரதிதாசன், தனித்துணை ஆட்சியர் எஸ்.சரவணன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!