Public grievance redressal camp related to food supply: Perambalur Collector information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் பெரம்பலூர் வட்டம், கவுல்பாளையம் கிராமத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர், தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், நெற்குணம் கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், குன்னம் வட்டம், நன்னை கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (மு.கூ.பொ), வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், மருதடி கிராமத்தில் உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும் 12.11.2022 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.

மேற்படி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!