Public petition to the Namakkal District Collector to solve the problem of drinking water
நாமக்கல் : குடிநீர் கேட்டு அணியார் கிராமம் பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்திடம் அணியார் கிராம பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
அணியார் கிராமம் கொளந்தாபாளையத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகிறோம். அனைத்து குடும்பத்தினரும் விவசாயம் மற்றும் விவசாய கூலித்தொழில் செய்து வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கிறோம்.
கடந்த 6 மாதத்திற்கு மேலாக எங்கள் கிராமத்திற்கு வரவேண்டிய காவிரி குடிநீர் வராததால், கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக வீட்டுக்கு ஒரு குடம் தண்ணீர் கூட கிடைக்கவில்லை.
இதனால் அனைத்து பொதுமக்களும் சிரமப்பட்டு வருகிறோம், மேலும் தண்ணீர் இல்லாமல் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உடனடியாக எங்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.