public protest urging to close up liquor shop near the perambalur

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமத்தூர் கிராமத்தில் பெருமத்தூர் – மிளகாநத்தம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

இந்த டாஸ்மார்க் கடையை முட வலியுறுத்தி கடந்த 1 மாதத்திற்கு முன்பு பொதுமக்கள் கடை முன்பு மறியல் செய்தனர். இதை தொடர்ந்து அரசு மதுபான கடை (எண் 6421) பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டது. டாஸ்மார்க் கடையை முட வலியுறுத்தி பெருமத்தூர், மிளகாநத்தத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலர் டாஸ்மார்க் கடை முன்பு மறியல் போராட்டம் செய்தனர்.

தகவல் அறிந்த வந்த மங்களமேடு போலிஸ் துணை சூப்பிரரெண்டு ஜவகர்லால், உதவி காவல் ஆய்வாளர் தவமணி தலைமையில் வந்த போலிசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில் சமாதானம் அடையாத பொதுமக்களை போலிசார் துரத்தி விட்டு போலிஸ் பாதுகாப்புடன் டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளர் ரமேஷ், உதவியாளர்கள் பரமசிவம், கணேசன் ஆகியோர் கடையை திறந்து மதுவிற்பனை செய்தனர்.

சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாசியின் சொந்த ஊரான பெருமத்தூர் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மார்க் கடை மூடாமல் தொடர்ந்து நடத்தி வந்தால் பெருமத்தூர் வரும் சந்திரகாசி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!