Public school students in Perambalur district protesting bus tariff hike
பெரம்பலூர் மாவட்டத்தில், எசனை, கீழக்கணவாய் செட்டிக்குளம், பெரம்பலூர் கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று தமிழக அரசு உயர்த்தி உள்ள பேருந்து கட்டண உயர்வை கண்டித்து காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடங்களுக்கு சென்று, பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை அரசுக்கு தகவல் தெரிவிப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
சாலை மறியல் நடக்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாற்றுப் பாதைகளில் வாகனங்களை போலீசார் திசை திருப்பி வருகின்றனர். பேருந்து கட்டண சாலைமறியல்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளதால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றடைய வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் மற்றொரு புறம் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.