பெரம்பலூர்: தமிழக அளவில் திருச்சி, சென்னை, ஈரோடு, தஞ்சாவூர், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களைத் தவிர்த்து தமிழகத்தின் பிற 26 மாவட்டங்களில் புதுவாழ்வு திட்டம் தமிழக அரசு மூலம் கடந்த 2006ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டு கடந்த சுமார் 11 ஆண்டுகாளாக நடைபெற்று வருகிறது.
இதில் திடட மேலாளர், உதவி திட்ட மேலாளர், ஒருஙகிணைப்பாளார் என மொத்தம் 1540 பேர் தமிழக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கிராமப் புறப் பகுதிகளில் வறுமையில் வாழ்வோர், மற்றும் ஏழைகள், மிகவும் என பொருளாதாரத்தில் மின் தங்கிய மக்களுக்கு வேலை வாய்ப்பு, மற்றும் பயிற்சிகள் கொடுத்து அவர்கள் வாழ்வாதாரத்தை முன்னற்ற அடைய பணிபுரிந்து வந்தனர்.
தற்போது இத்திட்டம், வரும் ஜுன் 30-தில் முடிவடைவதால், இவர்களுக்கு பணிவாய்ப்பு மட்டுமில்லாமல், வருமானமும், வாழ்க்கை எதிர் கொள்ள கடும் சிரமத்திற்கு ஆளாக உள்ளதால், முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அறிவித்தப்படி தங்களுக்கு அரசு தொடங்கும் இருக்கும் தமிழக ஊரக புத்தாக்கம் திட்டம் என்ற திட்டத்தில் மீண்டும் பணி வழங்க வேண்டும், நிலுவையில் இருக்கும், பணப்பலன்களை வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சுமார் 40 பேர் புது வாழ்வு திட்ட அலுவலகததில் இன்று தங்களுக்கு வாழ்வு வழங்க வேண்டும் என உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று மாலையில் நடக்கும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனில் நாளை சென்னையில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.