Quality Assessment Camp for Loans to Self Help Groups for Women ஊரக மற்றும் நகர்புறப் பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கான தர மதிப்பீடு முகாம் நடைபெற உள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கி 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடன் இணைப்பு பெற சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

எனவே, கடன் பெற தகுதியான அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களும் தங்கள் குழுக்களுக்கு கடன் பெற தரமதிப்பீடு செய்ய ஏதுவாக அனைத்து பதிவேடுகளையும் முழுமையாக பூர்த்தி செய்து வங்கி சேமிப்பு புத்தகம், வங்கி கடன் புத்தகம் போன்ற இதர ஆவணங்களுடன் தரமதிப்பீடு முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.

அதன்படி, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், பூலாம்பாடி பேரூராட்சி மற்றும் அரும்பாவூர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும்,

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 10.08.2017 (வியாழன் கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தர மதிப்பீடு முகாம் நடைபெறவுள்ளது.

மேலும், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், பெரம்பலூர் நகராட்சி மற்றும் குரும்பலூர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும்,

வேப்பூர் ஊராட்சி ஒன்றியம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் 11.08.2017 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தர மதிப்பீடு முகாம் நடைபெறவுள்ளது.

மேற்படி கடன் பெற தகுதியான அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களும் அனைத்து ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளுடன் பங்கேற்று வங்கி கடன் பெற்று பயனடையலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!