Quick action for petitions filed in jamabanti : Namakkal Collector order to officers

நாமக்கல்: ஜமாபந்தியில் அளிக்கப்படும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு நாமக்கல் ஆட்சியர் உத்தரவிட்டார்.

நாமக்கல் தாலுக்காவிற்குட்பட்ட 8 வருவாய்க் கிராமங்களுக்கான ஜமாபந்தி தாலுக்கா அலுவகத்தில் நடைபெற்றது.

தீர்வாய அலுவலரான மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை வகித்தார்.

ஜமாபந்தியில் ராசாம்பாளையம், ரங்கப்பநாயக்கன்பாளையம், திண்டமங்கலம், பெரியாகவுண்டம்பாளையம், தி.நல்லாகவுண்டம்பாளையம், நரவலூர் அக்ரஹாரம், தளிகை, நரவலூர் தொட்டிப்பாளையம் ஆகிய வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 37 மனுக்களை அளித்தனர்.

இந்த மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து ஜமாபந்தி முடிவதற்குள் சம்மந்தப்பட்ட மனுக்களுக்குத் தீர்வு வழங்குமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
வரும் 11 ம் தேதி சிலுவம்பட்டி, மாரப்பநாய்க்கன்பட்டி, நல்லிபாளையம், அக்ரஹார அய்யம்பாளையம், சிங்கிலிப்பட்டி, எர்ணாபுரம், தும்மங்குறிச்சி, மேலப்பட்டி மேல்முகம், மிட்டா அணியார் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும்,

12ம் தேதி ஜோடிகை அணியார், சர்வமான்ய அணியார், காதப்பள்ளி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) செந்தில்அரசு,தாசில்தார் செந்தில்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!