R.T.Ramachandran MLA is wearing an garland to Anna’s Statue, his 110th birthday
பெரம்பலூரில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிலைக்கு ஆர்.டி. ராமச்சந்திரன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி. ராமச்சந்திரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
மாவட்ட துணைச்செயலாளரும், சிதம்பரம் தொகுதி எம்.பியுமான மா.சந்திரகாசி , முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகர் வரகூர் ஆ.அருணாசலம், பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் ஆலத்தூர் என்.கே. கர்ணன், வேப்பந்தட்டை என்.சிவப்பிரகாசம், கீழப்புலியூர் பத்ரா செல்வம், மகளிர் அணியினர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே திமுகவினர் குரும்பலூர் மற்றும், வேப்பந்தட்டையில் உள்ள அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், மதிமுக கட்சியை சேர்ந்தவர்களும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.