Rain in various parts of Perambalur district Farmers happy!
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாலை பல்வேறு இடங்களில் பரவலான மழை காற்றுடன் பெய்தது.
தமிழக அளவில், பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரி அதிக அளவில் நடக்கும் மாவட்டம், ஆடிப்பட்டத்தில், பருத்தி கம்பு மக்காச்சோளம், வரகு, சாமை, சோளம் உள்ளிட்ட பல்வேறு மானாவாரியில் விளையும் பயிர்களை சாகுபடி செய்வது வழக்கம்.
இந்தாண்டு ஆடிப்பட்டம் முழுமையாக மழைத் தவறியதால், விதைப்பு பணிகள் முடங்கி போய் உள்ளது. மேலும், வேளாண் அங்காடிகளில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட விதைகள் அனைத்தும் தேக்கி கிடக்கின்றன. அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே விவசாய பணிகள் தொடங்கலாம் உழவர்கள் ஆவவோடு எதிர்பாத்து காத்துள்ளனர்.
வானிலை மையம் இன்று முதல் சில நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.