Rain with winds near Perambalur; Traffic damage due to falling tree on the road ||பெரம்பலூர் அருகே சூராவாளி காற்றுடன் மழை; சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள வெங்கனூர் கிராமத்தில் சூராவளி காற்றுடன் திடீரென பெய்த மழையால் ஆத்தூர்-பெரம்பலுரர் நெடுஞ்சாலையில் இருந்த புளியமரம் சாய்ந்து விழுந்துதது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வெப்பத்துடன் அனல் காற்றாய் வீசி வந்ததால் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்து வந்தனர். இன்று மாலை திடீரென கரும்மேகங்கள் வானில் திரண்டன, பலத்த இடி மின்னல் மற்றும் சூராவாளி காற்றுடன் பெரம்பலூர் உள்ளிட்ட கிருஷ்ணாபுரம்,வெங்கனூர்,உடும்பியம்,வடக்குமாவிலங்கை,நெற்குணம் ஆகிய பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

வெங்கனூர் பகுதியில் வீசிய சூராவளி காற்றினால் சாலையோரம் இருந்த புளியமரம் ஆத்தூர்-பெரம்பலூர் நெடுஞ்சாலையில் சாலையின் முறிந்து விழுந்ததை அறிந்த அரும்பாவூர் போலீசாருடன் ரோந்து போலீசார் இணைந்து சாலையின் நடுவில் சாய்ந்த புளிய மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் அந்த சாலையில் சுமார் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அத்திகட்டி மழை

பெரம்பலூரில் பல இடங்களில் மழை பெய்த போது அத்திகட்டி, ஆலங்கட்டிகளாக மழை விழுந்தது. மக்கள் கைளில் எடுத்து விளையாடி மகிழ்நதனர்.

மின்சாரம் துண்டிப்பு :

பெரம்பலூர் சுற்று வட்டப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின்சாரம் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக துண்டிக்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!