Rainfall and lakes water capacity in Perambalur district

Keela kudikadu Anicut surpluses 02.12.2017


பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீ)

பெரம்பலூர் 11, வேப்பந்தட்டை 11, தழுதாழை 13, செட்டிக்குளம் 2, பாடாலூர் 4, என மொத்தம் 41 மி.மீ மழையளவு பதிவாகியது. சராசரி மழையளவு 8.10 மி.மீ ஆகும்.

பெரம்பலூர் மாவட்ட ஏரிகள் நீர் கொள்ளளவு விவரம் :

பெரம்பலுார் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு துறையின் கட்டுப்பாட்டின்கீழ் 73 ஏரிகள் உள்ளன. 4 ஏரிகள் முழுக் கொள்ளவை எட்டின. இதில் 600 எக்டேர் பரப்பளவு கொண்ட அரும்பாவூர் பெரிய ஏரி, 354 எக்டேர் பரப்பளவு கொண்ட வடக்கலுார் பெரிய ஏரி மற்றும் அரும்பாவூர் சின்ன ஏரி, வரகுபாடி ஏரி, ஆகியவையும் நிரம்பின. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தெரணி, காரை சின்ன ஏரி, குரும்பலூர், கீரைவாடி, வெங்கலம் சின்ன ஏரி, எழுமூர் ஏரி போன்றவை 75 – 100 சதவீதத்திற்குள் நீர் கொள்ளவை எட்டி உள்ளன.

காரை பெரிய ஏரி, எசனை ஏரி, சிறுவாச்சூர், செட்டிக்குளம், பொம்மனப்பாடி, நாரணமங்கலம், துரைமங்கலம், பெரம்பலூர் சின்ன ஏரி, ஆகியவை 50 – 75 சதவீதத்திற்குள் நீர் கொள்ளவை எட்டி உள்ளன.

லாடபுரம் பெரிய ஏரி, நெற்குணம், பாண்டகப்பாடி, பூலாம்பாடி பொன்னேரி, பூலாம்பாடி சின்ன ஏரி, பெரியம்மாபாளையம், வெங்கனூர், தழுதாழை, தொண்டைமாந்துறை, கீழக்கரை மதவாணையம்மன் ஏரி, அரணாரை, தேனூர், பெரம்பலூர் பெரிய ஏரி, வெங்கலம் பெரிய ஏரி, துரைமங்கலம் சின்ன ஏரி, அன்னமங்கலம், மேலப்புலியூர், லாடபுரம் சின்ன ஏரி, களரம்பட்டி, செஞ்சேரி, புதுநடுவலூர், அயிலூர், டி.களத்தூர் பெரிய மற்றும் சின்ன ஏரிகள், கீழப்பெரம்பலூர், வெண்பாவூர், நூத்தப்பூர், கைகளத்தூர், பில்லங்குளம், காரியனூர், நெய்குப்பை, தொண்டப்பாடி, சாத்தனவாடி, திருவாலந்துறை, பேரையூர், சின்னார், அரசலூர், வி.களத்தூர் பெரிய மற்றும் சின்ன ஏரிகள், செங்குணம், ஆய்குடி, கீழப்புலியூர், கீரனூர், பெண்ணகோணம், ஒகளூர், கிளியமத்தூர், கிளியூர், பெருமத்தூர், வயலூர், அத்தியூர், வடக்களூர் அகரம், கண்ணப்பாடி, கைப்பெரம்பலூர், ஆண்டிக்குரும்பலூர், அகரம்சீகூர் ஆகிய 55 ஏரிகள் 50 சதவீதத்திற்கு கீழ் கொள்ளவு மழை நீரை பெற்றுள்ளன.

விசுவக்குடி நீர்த்தேக்கம் 5.40 மீ தண்ணீரை பெற்றுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!