Ration shops in rural areas of operation to the record of the Village Council meeting will take place on 15 to be subjected to social audit, the District Collector.
இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது:
பொது விநியோகத்திட்டத்தின் செயல்பாட்டிலும் நியாய விலைக்கடைகளில் செயல்பாட்டிலும் வெளிப்படையான முறையை கொண்டுவரும் வகையில் நியாய விலைக்கடைகளின் பதிவேட்டினை சமூக தணிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
மேலும் அரசு ஆணை (நிலை) எண் 143 கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் (எப்1)துறை நாள்: 06.10.2010-ன்படி பொது விநியோகத்திட்டத்தின் செயல்பாட்டிலும் நியாய விலைக்கடைகளில் செயல்பாட்டிலும் வெளிப்படையான முறையை கொண்டுவரும் வகையில் நியாய விலைக்கடைகளின் பதிவேட்டினையும் சமூக தணிக்கைக்கு உட்படுத்த ஆணையிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராம புறங்களில் செயல்படும் நியாய விலை கடைகளின் கணக்குகளை 15.08.2016 அன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் சமூக தணிக்கைக்காக பொதுமக்கள் முன்பு வைக்கப்படும். பொதுமக்கள் 15.08.2016 அன்று கிராமசபை கூட்டத்தில் நியாய விலை கடைகளின் சமூகத்தணிக்கையில் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.