Reddy Nala sanga three 3 grand functions in Perambalur
பெரம்பலூர் ரெட்டி நல சங்கத்தின் சார்பில், அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், கல்வி உதவித் தொகை வழங்கல், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் திருமண மண்டபத்தில், நடைபெற்றது.
விழாவிற்கு தலைவர் பி. நீல்ராஜ் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலர் நா. தேவராஜன், மாவட்ட ரெட்டி நல இளைஞரணி தலைவர் ஆர்.சி. ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அரிமா சங்கத் தலைவர் பி. மணி, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவரும், அரிமா சங்கத்தின் சாசன தலைவருமான மு. ராஜாராம், முன்னாள் நகராட்சி துணைத் தலைவர், 007 கி.முகுந்தன், பாரத் டிரான்ஸ்போர்ட்ஸ் கே.என். ஜெயராமன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
சிறப்பு விருந்தினராக மாநில துணைத் தலைவர் பா. தயாளன், கவுரவ விருந்தினராக தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தலைவர் அ. சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
இந்நிகழ்ச்சியில், அஸ்வின்ஸ் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.வி. கணேசன், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி சி. சந்திரசேகரன், மாநில செயற்குழு உறுப்பினரும், வள்ளலார் மோட்டார்ஸ் நிறுவனருமான ஜே. அரவிந்தன், இளைஞரணி மாவட்ட செயலர் 007 மு. இமயவரம்பன் மற்றும் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நற்பணி மன்றம் மல்லிகா ஜெயராமன் ( தலைவர்), சித்ரா புழேந்தி (செயலாளர்), தீபா அரவிந்தன் (பொருளார்) உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட செயலரும். ஓய்வு பெற்ற ஆசிரியருமான நா. ஜெயராமன் வரவேற்றார். பொருளாளர் அ. செல்வராஜ் நன்றி கூறினார்.