
Redressal meeting for Freedom Fighters on the 14th of Namakkal
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களின் குறைகளைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள, சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்களின் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 14ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து குறைகளை கேட்டு நடவடிடக்கை எடுக்க உள்ளார்.
கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.