Regional officials in local elections in the district to serve as practice for Perambalur

election-meeting-perambalur-collector-met-zonal-officers பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற உள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சிப் பணியாளருமான க.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி பகுதிக்கு 3 மண்டல அலுவலர்களும், குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளுக்கு தலா ஒரு மண்டல அலுவலரும், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு 10, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு 15, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு 14, வேப்பு+ர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு 14 மண்டல அலுவலர்கள் என மொத்தம் 60 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மண்டல அலுவலர்கள் தேர்தல் பணிகளின் போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்துமான பயிற்சிக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான க.நந்தகுமார் தலைமையில் இன்று (01.10.2016) மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சிப் பணியாளர் பேசியதாவது:

மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிதண்ணீர், கழிப்பறை வசதி, சாய்தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் மற்றும் 200 மீட்டரில் சுண்ணாம்புகொண்டு எல்லைக்கோடு வரையப்பட்டுள்ளதா என்றும், 200 மீட்டருக்குள் ஏதேனும் சுவர் விளரம்பரங்கள், கொடிகள் அல்லது சின்னங்கள் வரையப்பட்டிருந்தால் அவை முறையாக அழிக்கப்பட்டுள்ளதா, அப்புறப்படுத்தப்பட்டுள்ளதா என்றும் கண்காணிக்கவேண்டும்.

நன்னடத்தை விதிகள் மீறப்பட்டிருந்தால் அதனை உடனே சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். வாக்குப்பதிவு நாள் அன்று நகரப்பகுதி மண்டல அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உபரியாக தங்கள் வாகனத்தில் வைத்திருக்க வேண்டும். ஏதேனும் வாக்குச்சாவடியில் இயந்தரங்கள் பழுது ஏற்பட்டால், பழுது ஏற்பட்ட அரைமணி நேரத்திற்குள் மாற்று வாக்குப்பதிவு இயந்திரத்தினை கொண்டு தொடர்ந்து வாக்குப்பதிவு நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் இருப்பில்(ரிசர்வ்) உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர் என 2 அலுவலர்களை தங்களுடன் வாகனத்தில் அழைத்துச் செல்ல வேண்டும். ஏதேனும் வாக்குச்சாவடிகளில் அலுவலர்கள் தேவைப்பட்டால் உடனே மாற்று அலுவலரை நியமித்து, அதனை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்க வேண்டும். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் தயார் செய்ய வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், மாதிரி வாக்குப்பதிவு, வேட்பாளர் பிரதிநிகள் முன்பு நடைபெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வாக்குச்சீட்டின் அடிக்கட்டையில் வாக்காளரின் வரிசைஎண் குறிக்கப்பட்டு வாக்காளரிடம் ஒப்பம் பெறப்படவேண்டும். மண்டல அலுவலர;கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சுழற்சி முறையில் ஆய்வு செய்ய வேண்டும்.

வாக்குப்பதிவு 5 மணிக்கு முடிவடையும் நேரத்தில் வாக்குச்சாவடிக்கு வருகைதந்துள்ள அனைத்து வாக்காளருக்கும் கடைசி நபரிலிருந்து அடையாளச் சீட்டினை வழங்கி வாக்களிக்க அனுமதிக்க வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளிலிருந்து வாக்குப்பதிவு பொருட்களை சரிபார்த்து பெற்று வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும்.

இன்று வழங்கப்பட்ட அறிவுரைகளை மண்டல அலுவலர்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும். மேலும், 08.10.2016 மற்றும் 14.10.2016 ஆசிய நாட்களில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மண்டல அலுவலர்கள் பயிற்சி வகுப்புகளை நடத்தவேண்டும்.

நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும், அமைதியாகவும் நடத்த அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தக்குமார் தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!