Registration Case: grocery storekeeper, consumer court Perambalur the authorities to pay compensation of Rs 23 thousand.

அரியலூர் பட்டுநூல்கார தெருவை சேர்ந்தவர் ரவிசந்திரன். மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 2-6-2014-ந் தேதி அரியலூர் பெரியார் நகர் பகுதியில் காலிமனையை ரவிசந்திரன் விலைக்கு வாங்கினார். மேலும் இந்த காலி மனைக்கான கிரைய பத்திரத்தை பதிவு செய்வதற்காக அரியலூர் சார் பதிவாளரிடம் விண்ணப்பித்தார்.

ஆவணங்களை சரிபார்த்த சார்பதிவாளர், இந்திய முத்திரைதாள் கட்டண சட்டத்தின் கீழ் காலிமனையின் மதிப்பு குறைவாக உள்ளது என்று கூறி, அந்த ஆவணங்களை திருச்சியில் உள்ள முத்திரைத்தாள் சிறப்பு துணை ஆட்சியருக்கு அனுப்பி வைத்தார். அங்கு காலிமனை வாங்கியது தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது., ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்து 351-ஐ முத்திரை கட்டணமாக கட்ட வேண்டும் என்று ரவிசந்திரனுக்கு நோட்டீஸீம் அனுப்பப்பட்டது.

இதை தொடர்ந்து பெரியார்நகர் பகுதியில் காலி மனைக்கு தமிழக பத்திரப்பதிவு துறை விதித்திருந்த பதிவுக்கட்டணம் குறித்த விவரங்களை கணினியில் பதிவிறக்கும் செய்து அதிகாரிகளிடம் ரவிசந்திரன் காண்பித்தார். அதன் பின்னரும் காலிமனை வாங்கியதற்கான பத்திரப்பதிவு ஆவணங்களை பதிவு செய்து கொடுக்காமல் இழுத்தடிக்கப்பட்டதால், இது குறித்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ரவிசந்திரன், கடந்த 2016ம் ஆண்டு அக்.10ல் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி கலியமூர்த்தி மற்றும் உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயலட்சுமி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு கூறியதாவது: அதில், சேவை குறைபாடு காரணமாக ரவிசந்திரன் அலைக்கழிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். எனவே திருச்சி சிறப்பு துணை கலெக்டர் (முத்திரை கட்டணம்), அரியலூர் சார்பதிவாளர் ஆகியோர் இழப்பீடாக ரூ.20 ஆயிரத்தையும், வழக்கு செலவிற்காக 3 ஆயிரத்தையும் ரவிசந்திரனுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியிருந்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!