பெரம்பலூர் அருகே உள்ள அருமடல் கிராமத்தில் கடந்த மே.17 அன்று எதிர்பாராமல் ஏற்பட்ட தீவிபத்தில் அருமடலை சேர்ந்த முருகேசன், மணி ஆகியோர்களது வீடு முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும், வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து முற்றிலும் நாசமானது.
நிவாரண உதவிகளான இரண்டு குடும்பங்களுக்கும் தலா ரூ.2,500- வீதம் ரூ.5000-க்கான தொகை, வேட்டி, சேலை, 5 கிலோ அரிசி, 2 லிட்டர் மண்ணெண்ணெய் உள்ளிட்ட உதவிப் பொருட்களை எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன், டி.ஆர்.ஓ பாஸ்கர் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வின்போது வட்டாட்சியர் (ச.பா.தி) சிவக்குமார் உடனிருந்தார்.