Relief materials on behalf of the Association of Perambalur District Trading Societies for flood-hit Kerala

பெரம்பலூர்: நமது அண்டை மாநிலமான கேரளாவில், வரலாறு காணாத கன மழையின் காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது வரை 300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த தொடர் கனமழையின் காரணமாக மக்கள் வீடு உள்ளிட்ட உடமைகளை இழந்து வாடும் கேரள மாநில மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், உணவு, பால் பொருட்கள், குடிநீர; உள்ளிட்ட நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் பல்வேறு வணிக சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட அரிசி, சக்கரை, குடிநீர், பருப்பு வகைள், சமையல் எண்ணை உள்ளிட்ட ரூ.5 இலட்சம் மதிப்பிலான 10 டன் நிவாரணப்பொருட்களை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா ள் இன்று ஆட்சிய அலுவலகத்திலிருந்து கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

அப்போது, மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்புத்துறை) சவுமியசுந்தரி, மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் சண்முகநாதன், செயலாளர் இளங்கோவன், இணைச் செயலாளர் ரவிசுந்தரம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!