Removal of medical waste by the regulation: Perambalur municipality

பெரம்பலூர் நகராட்சி ஆணையர் முரளி விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் இருந்து உயிரி மருத்துவக் கழிவுகள், வழக்கமான திடக்கழிவுகளுடன் கலக்கப்பட்டு மருத்துவமனை பணியாளர்களால், மருத்துவமனைக்கு அருகில் பொது இடத்தில், நகராட்சி குப்பை பெட்டியில் கொட்டப்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

இச்செயல் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், திடக்கழிவு மேலாண்மை விதிகள்படியும் மற்றும் உயிhp மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகளின்படியும் குற்றச் செயலாகும்.

எனவே, இவ்வறிவிப்பு கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்திற்குள் அனைத்து மருத்துவமனைகளும் திடக்கழிவுகள் மட்டும் அப்புறப்படுத்த நகராட்சியில் வகுக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும், உயிரி மருத்துவக் கழிவுகள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், அரசு விதிமுறைப்படி சுட்டிக்காட்டப்பட்டுள்ள அமைப்பினரிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டத்தின்படியும் சுற்றுச்சூழல் பொறியாளா; தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பெரம்பலூர் மாவட்டம் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பதற்கும், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்பதற்கும் அறிக்கை அனுப்பப்படும். எனவே மருத்துவமனை நிர்வாகங்கள் இது போன்ற நடவடிக்கைகள் தொடராமல், நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!