republic day cermony in perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் 68 குடியரசு தினக் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. பெரம்பலூர் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் கொடியேற்றி வைத்தார் பின்னர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், தியாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். 1 கோடியே 25 லட்சத்து 95 ஆயிரத்து 476 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயானிகளுக்கு வழங்கினார். பின்னர், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதே போன்று அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.