Resistance to NEET Examination: Resignation of Villupuram Government School teacher

நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விழுப்புரம் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நீட் தேர்வு தோல்வியால் கடந்த 1 ம் தேதி அரியலுார் மாணவி அனிதா இறந்து போனார்.அதை தொடர்ந்து தமிழகம் முழுதும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகிறது.

மாணவ மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு, ஜெ.,சமாதியில் போராட்டம் என போராட்டங்கள் வெடித்து வருகிறது.

இன்று நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விழுப்புரம் அரசுப் பள்ளி ஆசிரியை தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் வைரபுரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் சபரிமாலா. இவர் நாடு முழுவதும் ஒரே கல்வி முறையை அமல்படுத்த வலியுறுத்தி தனது 7 வயது மகனுடன் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சபரிமாலா இன்று தனது ஆசிரியை பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.

இதுகுறித்து சபரிமாலா கூறும் போது, என்னுடைய ராஜிநாமாவை அனிதாவுக்கு சமர்ப்பிக்கிறேன்.

அனிதாவின் தற்கொலை மாணவர்கள் இடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் நலன் காக்காத அரசின் பணி எனக்கு தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!