Resolution at the Perambalur BJP meeting to take collector action against illegal quarries

படவிளக்கம்: பெரம்பலூரில் நடந்த பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் பேசிய போது எடுத்தப்படம். அருகில் மாவட்ட தலைவர் சந்திரசேகர், மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் வேலுசாமி வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில பொதுச்செயலாளரும், மதுரை மண்டல பொதுச் செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசிய அவர் திராவட கட்சிளை வெற்றி கொள்வது குறித்து உரை நிகழ்த்தினார். மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட பார்வையாளர் இல.கண்ணன், தடா.பெரியசாமி, முன்னாள் மாவட்டத் தலைவர் இளங்கோவன், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் சாமிநாதன், பல்வேறு அணியினர் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
நடந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில், பூட்டப்பட்ட வெங்காய கிடங்கை பாராமரிப்பு, முறையாக ஏல முறையுடன் நடத்த வேண்டும், அதிகாரிகள் துணையுடன் சட்ட விரோதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நடத்தப்படும் கல்குவாரிகளை மாவட்ட கலெக்டர் தடை செய்வதோடு, மாசுகட்டுப்பாட்டு விதிகளை மீறி பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கும் கிரஷர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், கோரையாறு பகுதியை சுற்றுலாப் பகுதியாக அறிவிக்க வேண்டும், கிடப்பில் உள்ள சின்னமுட்லு நீர்தேக்கத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், பெரம்பலூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு சாலைகளை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் கடைகளை அகற்றுவதோடு, சாக்கடைகளை சீர் அமைக்க வேண்டும், ஷேர் ஆட்டோக்ளை முறைப்படுத்துவதோடு, பெரம்பலூரை தூய்மை நகராட்சியாக மாற்ற வேண்டும், கொட்டரை நீர்தேக்கத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளுக்கு யூரியா தட்டுப்பாடு இல்லாமல், கிடைக்க நடைவடிக்கை வேண்டும், எறையூரில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு, அனுபவத்தில் உள்ளபடி பட்டா வழங்க வேண்டும்,
சிறப்பு பொருளாதார மண்டலம், உடனடியாக தொழில் நிறுவனங்கள் தொடங்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும், பெரம்பலூர் நகர மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தனி காவேரி கூட்டு குடிநீர்த்திட்டம் கொண்டுவரவேண்டும், பெரம்பலூர் ரயில் சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பெரம்பலூர் மாவட்டத்தில் 24 கிராமங்களுக்கு ஜல் ஜீவன் மிசன் திட்டம் வழங்கிய மத்தி அரசிற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பபட்டது. பெரம்பலூர் ஒன்றியத் தலைவர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.
முன்னதாக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் பேசியதாவது: திமுகவை காலி செய்ய தகுதியான கட்சி பி.ஜே.பி என்றும், தமிழகத்தில் பி.ஜே.பியில் 9 லட்சம் பதவிகள் காலி உள்ளது என்றும், விரைவில் பாஜக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.