Resolution in the Social Justice Federation demanding implementation of the Supreme Court order ruling against the 10.5 per cent reservation!

சீர்மரபினர் (டி.என்.டி) பிரிவில் உள்ள 68 சமூகத்தை சேர்ந்த, முக்கிய பிரமுகர்கள் சமூக நீதி கூட்டமைப்பு ஏற்படுத்தி உள்ளனர். அதில் பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் ஒட்டர், கள்ளர், மறவர், குறவர், அகமுடையர் உள்ளிட்ட சமூகத்தின் ஆதரவுடன் ஊராளிக் கவுண்டர் முன்னேற்ற சங்கம் மற்றும் ஊராளிக் கவுண்டர் இளைஞர் பேரவை சார்பில் கூட்டம் மாநிலத் தலைவர் கணேசன் தலைமையில் நடந்தது. மாநிலப் பொருளாளர் சி.தர்மராஜன் முன்னிலை வகித்தார். அதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

பெரம்பலூர் பாலக்கரையில், வரும் மே.23ம் தேதி காலை 10 மணிக்கு, தனி ஒரு சமூகத்திற்கு மட்டும் வழங்கிய 10.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டின் ஆணையை அரசு நடைமுறைப்படுத்த கோரி கோரிக்கை விளக்க கூட்டம் நடத்துவது. 115 எம்.பி.சி, டிஎன்டி/146 பிசி சமூகங்களின் மக்கள் திரளாக கலந்து கொள்ள அனைவருக்கும் தெரிவிப்பது,

கூட்டத்தில், சட்டப்படி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தகுந்தவாறு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், 10.5% இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பளித்த உச்ச நீதி மன்றத்தின் ஆணையை நடைமுறைப்படுத்த வேண்டும், உடனடியாக புள்ளி விவர சட்டப்படி சாதிவாரி சமூகக் கல்வி நிலைகள் மற்றும் பிரதி நிதித்துவம், வேலை வாய்ப்புகள் குறித்து புள்ளி விவர வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், புள்ளி விவர அடிப்படையில் சமூக நீதி அறிஞர்களை கொண்ட குழு அமைத்து சட்டப்படியான வகுப்புவாரி தொகுப்பு இட ஒதுக்கீட்டு முறையை செயல்படுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு 2007 ஆம் ஆண்டு சட்டப்படி NEET தேர்வு இல்லாமல் மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும், ரோகிணி கமிஷன் அறிக்கையை நடைமுறை படுத்த வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், பெரம்பலூர் நகர ஊராளிக்கவுண்டர் சங்கத் தலைவர் ஜெயபால், செயலர் சுப்பிரமணி, கவுரவ தலைவர் அருணா.ரவிச்சந்திரன், இளைஞர் பேரவை பாண்டியன், தமிழ்மறன், சுப்பிரமணி, நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!