Resolution to waive penal interest and interest-entrepreneurs loans

தொழில் முனைவோர் பெற்ற கடன்மீதான வட்டி-அபராத வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும் : பெரம்பலூர் சிறுகுறுதொழில்கள் சங்கம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதமர் அறிவித்த உயர்மதிப்பு பணநீக்க நடவடிக்கையால் முடங்கிப்போனதால், தொழில்முனைவோர் பெற்ற கடன்மீதான வட்டி-அபராத வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும்: சிறுகுறுதொழில்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட குறு, சிறு தொழில்கள் சங்கத்தின் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார், லட்சுமணன்ராவ் வரவேற்றார். கவுரவ தலைவர் ராமசாமி, செயலாளர் சதாசிவம் முன்னிலை வகித்தனர்

இதில் பெரம்பலூர் மாவட்டம் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமாக உள்ளதால் 25க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் ஒன்றுசேர்ந்து தொழில்கூட்டமைப்பு (கிளஸ்டர்) ஏற்படுத்தி மத்திய அரசிடம் நிதிபெற்று தொழில்கள் தொடங்கி பலநூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது மற்றும் தொழில்அபிவிருத்தி செய்வது. பிரதமர் நரேந்திரமோடி உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக பணப்புழக்கம் குறைந்துள்ளதால், சிறு,குறு தொழில்கள் முடங்கிப்போய் உள்ளன.

பெரம்பலூரை பொறுத்தவரை கட்டிடங்களுக்கு தேவையான கிரில் வேலைகள் அதிகம் நடக்கிறது. கல்உடைக்கும் கிரசர் ஆலைகள்அதிகம் உள்ளது. தற்போது பத்திரப்பதிவுகள் ஏதும் நடைபெறாததால் புதிய தொழில்கள் தொடங்கமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே வங்கிகள் மூலம் ஏற்கனவே கடன்பெற்று தொழில்செய்துவரும் தொழில்முனைவோருக்கு வட்டி, அபராத வட்டிகளை தள்ளுபடி செய்யவேண்டும்.

கடன் தொகையை செலுத்த காலஅவகாசத்தை அளித்து மததியஅரசு உத்திரவிடவேண்டும். வங்கிகள் புதியதாக தொழில்கள் தொடங்க கடன்களை தாராளமாக வழங்கி பெரம்பலூர் மாவட்ட தொழில்வளர்ச்சிக்கு உதவவேண்டும்.

எளம்பலூர் சிட்கோ தொழில்பேட்டை வளாகத்தில் கிராவல் மண் அடிக்கடி திருடிசெல்லப்படுகிறது. இதனை சிட்கோ அலுவலகம் தடுக்கவேண்டும்.

தொழில்புரிவோருக்கு குடிநீர்வசதி, கழிவுநீர்வாய்க்கால், தெருவிளக்குகள் பராமரிப்பு போன்ற அடிப்படை தேவைகளை உடனுக்குடன் செய்துதரவேண்டும். சிட்கோ வளாகத்தில் தளவாடப்பொருட்கள் அடிக்கடி திருடுபோவதை தடுக்க நுழைவு வாயிலில் கிரில்கதவு அமைத்து காவல்பணியாளர்களை நியமிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பேட்டரி ராஜேந்திரன், பிலவேந்திரன், கிருஷ்ணாபுரம் ஏகாம்பரம், இளவரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் துணைத்தலைவர் வாலிகண்டபுரம் அமீர்பாட்சா நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!