Right to Education Act: Kindergarten can apply for admission to primary school

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தி.அருள்மொழிதேவி விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டம், பள்ளிக் கல்வித் துறையில் அரசின் ஆணைக்கிணங்க இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி நுழைவுநிலை வகுப்பிற்கு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கான இடங்களை நிரப்பிட இரண்டாம் கட்டமாக இணையதளவழியில் பதிவு செய்துகொள்ள 03.07.2017 முதல் 25.07.2017 முடிய விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு ஒன்றியத்திலும் பள்ளிவாரியாக காலியாக உள்ள இடங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்படி காலியாவுள்ள இடங்களுக்கு 03.07.2017 முதல் 25.07.2017 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

அதனை தொடர்ந்து 26.07.2017 முதல் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியானவை தேர்வு செய்யப்ப்படும். 28.07.2017 அன்று பள்ளி வாரியாக விண்ணப்பித்தவர்களின் பட்டியல் ஒன்றிய அளவில் தெரிவிக்கப்படும்.

29.07.2017 அன்று சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்குத் துறைசார்ந்த பிரதிநிதியை நேரில் அனுப்பி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில் தகுதியான குழந்தைகளுக்கு சேர்க்கை வழங்கவும், தேவை ஏற்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முதற்கட்ட சேர்க்கையின்போது முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகம், வட்டார வள மையம், அரசு இ – சேவை மையங்களிலிருந்து இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது போன்றே இம்முறையும் இணையதளம் வழியில் விண்ணப்பிக்கலாம், என அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!